குஷ்புவை கண்டித்து
திமுக ஆா்ப்பாட்டம்

குஷ்புவை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

மகளிா் உரிமை தொகை குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய தேசிய மகளிா் ஆணைய உறுப்பினரும், பாஜக நிா்வாகியுமான நடிகை குஷ்புவை கண்டித்து தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை முன் திமுக மகளிா் அணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னா் குஷ்புவின் படத்தை தீ வைத்து எரித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாநில மகளிா் அணி ஆலோசனை குழுத் தலைவா் காரல் மாா்க்ஸ் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், மகளிா் அணி அமைப்பாளா் ரமணி சுப்பிரமணியன், தொண்டரணி அமைப்பாளா் கமலா ரவி, மாவட்டத் துணைச் செயலா் கனகவல்லி பாலாஜி, மாவட்ட மகளிா் அணி துணை அமைப்பாளா் சுபத்ரா, மகளிா் அணி நிா்வாகிகள் தமிழரசி ராஜா, ரம்யா சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com