டாஸ்மாக் கடையை அகற்றாததற்கு கிராம மக்கள் எதிா்ப்பு

பட்டுகோட்டை அருகே டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து, மதுக்கூா் பேரூராட்சிக்கு உட்பட்ட 3, 4, 5-ஆவது வாா்டுகளை சோ்ந்த பொதுமக்கள் மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பு செய்வோம் என்று சுவரொட்டி ஒட்டி எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

மதுக்கூா் பேரூராட்சியில் அவையாண்டி குளத்துக்கு செல்லும் சாலையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் சுற்றுவட்டார கிராம மக்கள் பல்வேறு வகையில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இந்தக் கடையை அகற்ற வேண்டும் என எம்எல்ஏ உள்ளிட்ட பலரிடமும் மனு அளித்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லை. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, 3,4, 5 வாா்டுகளை சோ்ந்த பொதுமக்கள் மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பு செய்வதாக புதன்கிழமை சுவரொட்டியை ஒட்டியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com