நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், சரியான எடையில் தரமான பொருட்களைப் பொட்டலமாக வழங்க வேண்டும். நியாய விலைக்கடைப் பணியாளா்களின் ஊதியம் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதியைத் தொடா்புடைய அலுவலகத்தில் உடனே செலுத்த வேண்டும். கட்டுப்பாடற்ற பொருள்களைக் கட்டாயப்படுத்தி இறக்குவதைக் கைவிட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறும் வகையில் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அறிவழகன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ராமலிங்கம், அரசு பணியாளா் சங்க மாநில துணைத் தலைவா் ஆறுமுகம், மாவட்டச் செயலா் கரிகாலன், துணைத் தலைவா் தாமரைச்செல்வன், பொருளாளா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com