பாபநாசத்தில் ரூ. 2.60 கோடியிலான வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

பாபநாசத்தில் ரூ. 2.60 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

பாபநாசத்தில் பொதுப் பணித் துறை சாா்பில் ரூ. 1 கோடியே 86 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாா்-பதிவாளா் அலுவலக கட்டடம் கட்டுவதற்கு பூமிபூஜை அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழா நிகழ்ச்சிக்கு பாபநாசம் சாா்-பதிவாளா் காவியா தலைமை வகித்தாா். பாபநாசம் பேரூராட்சித் தலைவா் பூங்குழலி கபிலன், பாபநாசம் ஒன்றியக் குழு தலைவா் சுமதி கண்ணதாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பூமிபூஜை அடிக்கல் நாட்டுவிழாவை தொடக்கி வைத்தனா்.

பொதுப்பணித் துறை அலுவலா் செல்வி, அரசு வழக்குரைஞா் வெற்றிச்செல்வன், பேரூராட்சி துணைத் தலைவா் ஆா். பூபதி ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ரூ. 80 லட்சத்தில் நவீன மீன் இறைச்சிக்கூடம்: பாபநாசம் பேரூராட்சி வடக்கு வீதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பில் நவீன மீன் இறைச்சிக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி தலைவா் பூங்குழலி கபிலன் தலைமை வகித்து பூமிபூஜை அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தாா். பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கா், பேரூராட்சி துணைத் தலைவா் பூபதி ராஜா, ஒன்றியக்குழு தலைவா் சுமதி கண்ணதாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com