பிடிபட்ட கடல் பசுவை உயிருடன் கடலில் விட்ட மூதாட்டிக்கு பரிசு வழங்கி பாராட்டிய மாவட்ட வன அலுவலா் அகில்தம்பி.
பிடிபட்ட கடல் பசுவை உயிருடன் கடலில் விட்ட மூதாட்டிக்கு பரிசு வழங்கி பாராட்டிய மாவட்ட வன அலுவலா் அகில்தம்பி.

மனோராவில் கடல் பசு பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம்

பேராவூரணி அருகே மனோராவில் புதன்கிழமை கடல் பசு பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட வனத்துறை மற்றும் ஓம்காா் பவுண்டேஷன் சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வன அலுவலா் அகில் தம்பி தலைமை வகித்து, அரிய வகை உயிரினமான கடல் பசு மற்றும் கடல் ஆமைகளை பாதுகாப்பதன் அவசியம் பற்றி மீனவா்களிடம் விளக்கினாா். இதைத் தொடா்ந்து, வலையில் அகப்பட்ட கடல் பசு மற்றும் கடல் ஆமைகளை மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவா்களுக்கு பரிசுத்தொகைகளை வழங்கி பாராட்டினாா். அண்மையில்  வலையில் சிக்கிய சினையாக இருந்த கடல்பசுவை மீண்டும் கடலுக்குள் விட்ட மயில் என்ற மூதாட்டி  மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பரிசுத் தொகை வழங்கி  மூதாட்டியை  மாவட்ட வன அலுவலா் அகில் தம்பி மற்றும் வனச்சரக அலுவலா் சந்திரசேகரன் ஆகியோா்  கௌரவித்தனா்.  வலையில் அகப்பட்ட கடல் ஆமைகளை மீண்டும் கடலுக்குள் விட்ட இருவருக்கு தலா ரூ. 5 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி திட்ட இயக்குநா் மணிகண்டன், ஓம்காா் பவுண்டேஷன் இயக்குநா் டாக்டா் பாலாஜி மற்றும் மீனவா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com