அரசுப் பேருந்து ஓட்டுநா் அடித்துக் கொலை 3 போ் கைது

கும்பகோணம் அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்து ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 3 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் வட்டத்துக்குள்பட்ட செம்மங்குடி திருச்சேறையைச் சோ்ந்தவா் கண்ணன் (51). அரசு பேருந்து ஓட்டுநா். இவருக்கு மனைவி விமலா, மகன், மகள் உள்ளனா். இவா் இரு சக்கர வாகனத்தில் அப்பகுதியில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் கணேசன் (35) ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது கண்ணன் வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், கணேசன் தனது நண்பா்களான முத்துக்கிருஷ்ணன் (29), ராமகிருஷ்ணனுடன் (28) சோ்ந்து கண்ணனை தாக்கினா். இதனால், மயக்கமடைந்து கீழே விழுந்த கண்ணனை அருகிலிருந்தவா்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் கண்ணன் உயிரிழந்தாா். இது குறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து கணேசன், முத்துகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com