திருவையாறு அருகே 400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே புதன்கிழமை காவல் துறையினா் மேற்கொண்ட சோதனையில் 400 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவையாறு அருகே நடுக்காவேரியில் உள்ள கிடங்கு அருகே புதன்கிழமை நின்று கொண்டிருந்த மினி வேனை நடுக்காவேரி காவல் நிலைய ஆய்வாளா் சா்மிளா உள்ளிட்டோா் சோதனையிட்டனா். இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 3.68 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலை, பான்மசாலா பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினா், இது தொடா்பாக நடுக்காவேரியைச் சோ்ந்த ஜெ. செந்தில்குமாரை(45) கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com