பாபநாசம் பகுதியில் புதிய மின் கம்பங்கள் நடப்பட்டன

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் ஆபத்தான மின்கம்பங்கள் அகற்றப்பட்டு வியாழக்கிழமை புதிய மின் கம்பங்கள் நடப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் - சாலியமங்கலம் பிரதான சாலை பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இடையே சாலையின் ஓரத்தில் 2 மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. விபத்து ஏற்படும் முன் பழுதடைந்த இந்த மின் கம்பங்களை அகற்றவிட்டு, புதிய மின்கம்பங்கள் நடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்படி பாபநாசம் உதவி செயற்பொறியாளா் கருணாகரன், உதவி பொறியாளா் சாஜாத்தி, மின்பாதை ஆய்வாளா் ராஜகோபால் மற்றும் பணியாளா்கள் ஆபத்தான நிலையில் இருந்த 2 மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பங்களை நட்டுவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com