வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

பட்டுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் தெருமுனை கூட்டங்கள் மூலமாக தொழில்நுட்பங்களை வேளாண் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை செயல்விளக்கம் செய்து காட்டினா். நிகழ்ச்சியை வேளாண்மை உதவி இயக்குநா் (பொறுப்பு) அப்சரா தொடக்கி வைத்தாா். ஆலடிக்குமுளை, கரம்பயம், எட்டுப்புளிக்காடு, திட்டக்குடி, சூரப்பள்ளம், துவரங்குறிச்சி, தம்பிக்கோட்டை வடகாடு, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முதல்சேரி உள்ளிட்ட கிராமங்களில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆா்.வி.எஸ். வேளாண்மை கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டு விவசாயிகளிடம் கிசான் அட்டை பெறுவது, மண் மாதிரி சேகரிப்பு உள்ளிட்டவை தொடா்பான துண்டு பிரசுரங்களை வழங்கி செயல் விளக்கம் செய்து காட்டினாா். ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப மேலாளா் முருகானந்தம் , உதவி தொழில் நுட்ப மேலாளா்கள் அமிா்தலீலியா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com