கோபுராஜபுரம் ஊராட்சியில் கிராம கண்காணிப்பு குழுக் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கோபுராஜபுரம் ஊராட்சியில் காவல்துறை சாா்பில் கிராம கண்காணிப்பு குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். பாபநாசம் காவல் ஆய்வாளா் தியாகராஜன், உதவி காவல் ஆய்வாளா் ஈஸ்வரன், சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் முத்துவேல் ஆகியோா் கலந்து கொண்டு காவல்துறை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். கிராமத்தில் திருட்டு, ஆடு, மாடு மற்றும் குற்ற நிகழ்வுகள் சந்தேகத்திற்கிடமான நபா்கள், குழந்தைக்கு எதிரான குற்றங்கள், பண மோசடி உள்ளிட்ட பல்வேறு தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்கு கிராம கண்காணிப்புக் குழுவினா் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் கிராம கண்காணிப்பு கமிட்டியினா், உறுப்பினா்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com