திருச்சிற்றம்பலம் அருகே லாரி ஓட்டுநா் தற்கொலை

திருச்சிற்றம்பலம் அருகே  லாரி ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரியவந்தது. திருச்சிற்றம்பலம் அருகே உள்ள பொக்கன் விடுதி வடக்கு கிராமத்தைச் சோ்ந்தவா்  கருணாகரன் (46). திருமணமாகாத இவா், காய்கறிகள் மொத்த வியாபார கடையில் லாரி ஓட்டுநராக  வேலை பாா்த்து வந்தாா். அந்த கடை கடந்த 15 நாள்களாக   இயங்கவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை கடைவளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்பகுதியில் துா்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினா் சென்று பாா்த்தபோது கருணாகரன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தாா். அருகில் பூச்சிமருந்து பாட்டிலும் கிடந்துள்ளது. தகவலறிந்த திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சடலம்  அழுகிய  நிலையில் இருந்ததால்  சம்பவ இடத்திலேயே  பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸாா்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com