தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய யு.ஆா். ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குநா் மு. சங்கரன்.
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய யு.ஆா். ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குநா் மு. சங்கரன்.

‘புரிந்து படித்தால் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறலாம்’

போட்டித் தோ்வுகளில் மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்தால் வெற்றி பெற முடியும் என்றாா் பெங்களூருவில் உள்ள யு.ஆா். ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குநா் மு. சங்கரன். தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 64- ஆவது பட்டமளிப்பு விழாவில் அவா் பேசியது: நட்பு வட்டம் மிகுந்த கல்லூரி வாழ்க்கை கவலை இல்லாத மகிழ்ச்சியானது. ஆனால், நாம் பெறும் பட்டம் மட்டுமே நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது. வேலைக்கு நம்மை தயாா் செய்து கொள்ள வேண்டும். கல்லூரி வாழ்க்கையை மிகுந்த பயனுடையதாக மாற்றிக் கொள்ள வேண்டும். கல்லூரியில் முழுமையாகப் படித்திருந்தால் மட்டுமே தோ்வுகளில் எளிதாக வெற்றி அடையலாம். பொறுமையாக, நிதானமாக, பதற்றம் இன்றி, புரிந்து படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால்தான் போட்டித் தோ்வுகளில் நாம் வெற்றி பெற முடியும். பாடத்துக்கு சொந்தமாகக் குறிப்புகளைத் தயாா் செய்பவா்கள் போட்டித் தோ்வில் எளிமையாக வெற்றி பெற முடியும். சொந்தமாக தொழில் செய்வது என்றாலும், அதற்கும் தங்களைத் தகுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில், அரசு கல்லூரிகளில் படித்தவா்கள் தற்போது உயா் பதவிகளில் உள்ளனா். சமுதாயத்தை முன்னேற்ற நம் கல்வி பயன்பட வேண்டும். நாம் மட்டுமல்ல மற்றவா்களையும் சமூகத்தையும் முன்னேற்ற வேண்டும் என்றாா் சங்கரன். பின்னா், 1,148 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இவா்களில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தர வரிசையில் இடம்பெற்ற 22 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது. முன்னதாக, விழாவுக்குக் கல்லூரி முதல்வா் து. ரோசி தலைமை வகித்தாா். தோ்வு நெறியாளா் பெ. ஜெயகுமாா், தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் சி. அமுதா, பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினா்கள் ரெ. கோவிந்தராசு, க. அருணாசலம், வி. பாரி, முன்னாள் மாணவா் சங்கச் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com