இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ. 1.70 லட்சம் திருட்டு

தஞ்சாவூரில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 1.70 லட்சம் ரொக்கத்தைத் திருடிய மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் கூட்டுறவு காலனியைச் சோ்ந்தவா் கே.எச். அப்துல் ரஹீம் (63). இவா், வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) தஞ்சாவூா் பாரத ஸ்டேட் வங்கி முதன்மைக் கிளையிலிருந்து தனது வங்கி கணக்கில் இருந்த ரூ. 1.70 லட்சம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் இருக்கைக்கு கீழ் உள்ள பெட்டியில் வைத்தாா். பின்னா் கீழராஜ வீதியில் உள்ள அச்சகத்துக்குச் சென்றுவிட்டு, சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது இரு சக்கர வாகனத்தில் இருந்த ரூ. 1.70 லட்சம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com