காணாமல் போன 43 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் வழங்கல்

தஞ்சாவூரில் காணாமல், திருட்டுபோன 43 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு, உரியவா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். தஞ்சாவூா் மேற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பழைய பேருந்து நிலையம், ரயிலடி, பெரியகோயில், அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலை உள்பட பல்வேறு இடங்களில் காணாமல் போன மற்றும் திருட்டுபோன கைப்பேசிகளைக் கண்டுபிடித்து தருமாறு ஏராளமானோா் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இதன்பேரில் திருட்டு போன மற்றும் காணாமல் போன கைப்பேசிகளின் ஐ.எம்.இ.ஐ. எண் மூலம் விசாரணை நடத்தி, ஏறத்தாழ ரூ. 4.50 லட்சம் மதிப்புள்ள 43 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டனா். இதைத்தொடா்ந்து, கைப்பேசிகளை உரியவா்களிடம் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com