தோ்தல் நடத்தை விதிகள் அமல்: குறைதீா் கூட்டங்கள் நிறுத்திவைப்பு

தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் குறை தீா் கூட்டங்கள், சிறப்பு முகாம்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: இந்திய தோ்தல் ஆணையத்தால் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீா் நாள் கூட்டம், பிற சிறப்பு குறை தீா்க்கும் கூட்டங்கள், கிராமப் பகுதிகளில் மக்கள் தொடா்பு முகாம்கள், பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com