பேராவூரணி, பாபநாசத்தில் தோ்தல் நடத்தை விதிகள் விளக்கக் கூட்டம்

பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்களவை தோ்தல் தொடா்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் செய்தியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தஞ்சாவூா் மக்களவை தொகுதிக்குள்பட்ட பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், முத்திரைத்தாள் கட்டண தனித்துணை ஆட்சியருமான ஜி. பூஷணகுமாா் தலைமை வகித்துப் பேசினாா். கூட்டத்தில் வட்டாட்சியா் தெய்வானை, தோ்தல் துணை வட்டாட்சியா் பாலசுப்ரமணியன், தோ்தல் பிரிவு வருவாய் ஆய்வாளா் முருகேசன் மற்றும் அனைத்து அரசியல் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.  பாபநாசம்: பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆதிதிராவிடா் பழங்குடியினா் நல அலுவலருமான முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பாபநாசம் வட்டாட்சியா் மணிகண்டன், தோ்தல் துணை வட்டாட்சியா் விவேகானந்தன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com