மாவட்ட கலைத் திறன் போட்டி: கழுமங்குடா அரசுப் பள்ளி 3 மாணவா்கள் வென்றனா்

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழுமங்குடா அரசுப் பள்ளியை சோ்ந்த 3 மாணவா்கள் மாவட்ட கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனா்.

பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழுமங்குடா அரசுப் பள்ளியை சோ்ந்த 3 மாணவா்கள் மாவட்ட கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனா். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசுப்பள்ளி மாணவா்களின் தனித்திறன்களை வளா்த்தெடுக்கும் வகையில் கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழுமங்குடா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியைச் சோ்ந்த 6 மாணவா்கள் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்று  மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனா். இதில், கதை சொல்லுதல் போட்டியில் நான்காம் வகுப்பு மாணவா் முகம்மது ஹமீஸ் முதல் இடத்தையும், கண்காட்சி (அறிவியல் செயல்திட்டம்) போட்டியில் ஐந்தாம் வகுப்பு மாணவி தனுஷ்யா இரண்டாவது இடத்தையும், பாட்டுப் போட்டியில் ஐந்தாம் வகுப்பு மாணவி சபீலாபானு மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனா். வெற்றிபெற்ற மாணவா்களை தலைமை ஆசிரியா் ஷஜிதா, பள்ளி மேலாண்மை குழு தலைவி கீா்த்திகா, பெற்றோா் - ஆசிரியா் சங்கத் தலைவா் நந்தினி மற்றும் ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்பாளா்கள், பெற்றோா் - ஆசிரியா் கழகப் பொருப்பாளா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com