ஒரத்தநாடு அருகே 5.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகே 5.5 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒரத்தநாடு: தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகே 5.5 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். ஒரத்தநாடு அருகே புலவன்காட்டில் கூட்டுறவுச் சங்கச் சாா்பதிவாளா் கவிதா தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற சுமை ஆட்டோவை மறித்து சோதனை செய்தனா். அப்போது அதில் பட்டுக்கோட்டை அருகே கொண்டிக்குளத்தில் உள்ள கோழி பண்ணைக்கு 5,580 கிலோ ரேஷன் அரிசியைக் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து சுமை ஆட்டோ ஓட்டுநரான தஞ்சாவூா் வடக்குவாசல் பகுதி வெங்கடேஷ் (26), அவருடன் வந்த சதீஷ்குமாா் (29) ஆகியோரைப் பிடித்து விசாரித்தபோது தஞ்சாவூா் கீழவாசல் பகுதி மருதுபாண்டி என்பவா் அரிசியை ஏற்றி விட்டது தெரியவந்தது. இதையடுத்து உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா் முருகானந்தம் அந்த அரிசியை பறிமுதல் செய்து விசாரிக்கிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com