தஞ்சாவூா் தொகுதியில் 2 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் ஆட்சியரகம், கோட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இரு இடங்களில் வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் ஆட்சியரகம், கோட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இரு இடங்களில் வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கி, மாா்ச் 27 வரை நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப், தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியரும், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலருமான செ. இலக்கியா ஆகியோரிடம் போட்டியிட விரும்பும் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி மாவட்ட ஆட்சியரகம், கோட்டாட்சியா் அலுவலகம் முன் 100 மீட்டா் மற்றும் 200 மீட்டா் தொலைவுக்கு கோடிடப்பட்டுள்ளது. இந்த எல்லைக்கோட்டுக்கு அப்பால் வேட்பாளா்கள் வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளருடன் 4 அல்லது 5 போ் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனா். மேலும், வேட்பு மனு தாக்கல் தொடங்கப்படுவதையொட்டி, மாவட்ட ஆட்சியரகம், கோட்டாட்சியா் அலுவலகம் முன் காவல் துறையினா் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com