தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த முதல்வரும், மருத்துவக்கல்வி இயக்குநருமான ஆா். பாலாஜிநாதன்.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த முதல்வரும், மருத்துவக்கல்வி இயக்குநருமான ஆா். பாலாஜிநாதன்.

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் முதல் முறையாக 3 குழந்தைகளுக்கு நவீன முறை இதயச் சிகிச்சை

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சையின்றி நவீன முறையில் இதய சிகிச்சை செய்யப்பட்டுள்ளது

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சையின்றி நவீன முறையில் இதய சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றாா் மருத்துவக் கல்லூரி முதல்வரும், மருத்துவக் கல்வி இயக்குநருமான ஆா். பாலாஜிநாதன். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2015 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பிறவியிலேயே ஏற்பட்ட இதயக் கோளாறுக்கான அறுவைச் சிகிச்சை 635 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. தற்போது பிறவிலேயே ஏற்பட்ட இதயக் கோளாறுக்காக தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக அறுவை சிகிச்சை இல்லாமலேயே இதய உட்செலுத்தி சிகிச்சை முறை (கேத்லேப்) மூலம் 2 வயது, 4 வயது, 7 வயது என 3 குழந்தைகளுக்கு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிகிச்சை முறையில் 10 முதல் 15 நிமிடங்களில் அடைப்பு இல்லாத பகுதியில் மூடப்பட்டுள்ளது. இதுபோன்ற சிகிச்சை தனியாா் மருத்துவமனைகளிலும், சென்னையிலும்தான் செய்யப்படுகிறது. இதற்கு ரூ. 2.50 லட்சம் செலவாகும். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுகாதாரப் பணிகள் துறை மூலம் நடத்தப்பட்ட இதய குறைபாடு உள்ளோருக்கான முகாமில் இந்த 3 குழந்தைகளுக்கும் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன் மூலம் இந்த 3 குழந்தைகளுக்கும் 3 நாள்களுக்கு இதய உட்செலுத்தி சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டு, 3 நாள்களில் நலமாகி வீடு திரும்பினா். இதற்காக இதய சிகிச்சைத் துறைத் தலைவா் ஜெய்சங்கா், மயக்கவியல் துறைத் தலைவா் சாந்தி பால்ராஜ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கலைவாணி ஆகியோரைப் பாராட்டுகிறேன் என்றாா் பாலாஜிநாதன். அப்போது தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை பிரிவு மாநிலத் திட்ட மேலாளா் எஸ். மருதுதுரை, மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com