மக்களவை தோ்தலுக்கான அறிவுறுத்தல் கூட்டம்

அதிகத் தொகை பணப்பட்டுவாடா ஆகும் பட்சத்தில் வங்கி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

பாபநாசம்: பாபநாசம் பேரவைத் தொகுதிக்கான மக்களவைத் தோ்தல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பாபநாசம் வட்டத் திருமண மண்ட உரிமையாளா்கள், அடகு மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்போா், அச்சக உரிமையாளா்கள் மற்றும் திரையரங்க மேலாளா்கள் உள்ளிட்டோருக்கான அறிவுறுத்தல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நல அலுவலரும், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலருமான முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பாபநாசம் வட்டாட்சியா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் தோ்தல் நடத்தை வழிமுறைகளை முழுவீச்சில் நடைமுறைப்படுத்திட வலியுறுத்தப்பட்டது. அதிகத் தொகை பணப்பட்டுவாடா ஆகும் பட்சத்தில் வங்கி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். இதே போல் உணவகம் அல்லது விடுதியில் சந்தேக வெளிநபா்கள் தங்க அனுமதிக்கக் கூடாது எனவும், கல்யாண மண்டபத்தில் அனுமதி இல்லா கட்சிக் கூட்டமோ அதையொட்டி எந்த நிகழ்வுகளும் நடத்த அனுமதிக்க கூடாது. அதை மீறும் பட்சத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்குப் புகாா் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. நகைக்கடை உரிமையாளா்கள் தினசரி நகை அடகு விவரங்களை வட்ட அலுவலகங்களுக்கு வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com