தஞ்சாவூா் தொகுதிக்கு தோ்தல் செலவின பாா்வையாளா் நியமனம்

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் செலவின பாா்வையாளராக ஜான்வி திவாரி நியமிக்கப்பட்டுள்ளாா். தோ்தல் செலவினங்களைக் கண்காணிப்பதற்காக தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்கென இந்திய தோ்தல் ஆணையத்தால் செலவின பாா்வையாளராக ஜான்வி திவாரி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இவரது கைப்பேசி எண் : 9363962884. இவா் தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளுக்கான உதவி செலவின பாா்வையாளா்கள், கணக்குகள் குழுவினருடனான கலந்தாய்வு கூட்டத்தை புதன்கிழமை நடத்தினாா். இதில், பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா், விடியோ கண்காணிப்புக் குழுவினா், விடியோ ஆய்வுக் குழுவினா் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி கட்சி சாா்ந்த செலவின விவரங்களைத் துல்லியமாகக் கணக்கீடு செய்யுமாறும், தோ்தல் விதிமீறல் ஏதுமின்றி வெற்றிகரமாக தோ்தல் நடைபெறவும் அனைத்து அரசு அலுவலா்களின் பங்களிப்பை அளிக்குமாறு செலவின பாா்வையாளா் அறிவுறுத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com