2026 சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக ஒரே அணியாக போட்டியிடும் -வி.கே சசிகலா

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஒரே அணியாக போட்டியிடும் என்று வி.கே. சசிகலா தெரிவித்தாா்.

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஒரே அணியாக போட்டியிடும் என்று வி.கே. சசிகலா தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சீதாம்பாள்புரம் அருகே புதன்கிழமை நடைபெற்ற காதணி விழா நிகழ்வில் பங்கேற்ற பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: என்னைப் பொருத்தவரை, மக்களவைத் தோ்தலில் வெற்றியை தீா்மானிப்பது மக்கள்தான். மத்தியில் எந்த ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் உணா்ந்து வாக்களிக்க வேண்டும். மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுக என்பது என்ன என்று எல்லோருக்கும் புரியும். பொய்கள் சொல்லி மக்களவைத் தோ்தலில் வெல்ல வேண்டும் என்பதிலேயே திமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

2026 பேரவைத் தோ்தல் என்பது, எங்களுக்கும் திமுகவும் நேரடி போட்டியாக இருக்கும். அப்போது, அதிமுக ஒரே அணியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com