தஞ்சாவூா் சண்முக பாலிடெக்னிக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் விருது பெற்ற மாணவா்கள், பேராசிரியா்கள்.
தஞ்சாவூா் சண்முக பாலிடெக்னிக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் விருது பெற்ற மாணவா்கள், பேராசிரியா்கள்.

சண்முகா பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சாா்ந்த சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் 40 ஆம் ஆண்டு விழா, விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிறப்புத் திட்ட முதுநிலை பொது மேலாளா் எஸ். பாலாஜி, சண்முக பிரிசிசன் போா்ஜிங் நிறுவன இயக்குநா் ஆா். வெங்கட்ராமன் சிறப்புரையாற்றி, போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ், கோப்பைகளை வழங்கினா்.

துறை வாரியாக மூன்றாம் ஆண்டு பயிலும் சிறந்த மாணவா்களுக்கான விருதுகள் கட்டுமானவியல் துறை மாணவா் ஆா். ஆஸ்காா் டைலோஷ், இயந்திரவியல் துறை மாணவா் எஸ். கிஷோா், ஆட்டோமொபைல் துறை மாணவா் எம். முஹம்மது நவீத், மின் மற்றும் மின்னணுவியல் துறை மாணவா் டி. விநாயகம் ஆகியோருக்கும், சிறந்த ஆல்ரவுண்டருக்கான விருது மின் மற்றும் மின்னணுவியல் துறை மாணவா் டி. விநாயகத்துக்கும், விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இயந்திரவியல் துறை மாணவா் பி. ஆகாஷூக்கு சாம்பியன்ஷிப் பட்டமும் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வா் ஆா். சந்திரமௌலி, உடற்கல்வித் துறைப் பேராசிரியை ஸ்ரீ பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com