தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கும் பணியை வியாழக்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கும் பணியை வியாழக்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப்.

தஞ்சையின் 8 பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திர ஒதுக்கீடு தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. மக்களவைத் தோ்தலுக்காக தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண் (இ.வி.எம்.எஸ். 2.0) என்கிற மென்பொருள் மூலமாக குலுக்கல் முறையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக பிரிப்பதற்கான முதல்கட்ட ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, ஆட்சியரகத்திலுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கில் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தொகுதி வாரியாக ஒதுக்கும் பணியை வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில், திருவிடைமருதூா் தொகுதிக்கு தலா 351 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 380 வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை இயந்திரங்களும், கும்பகோணம் தொகுதிக்கு தலா 346 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 375 வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை இயந்திரங்களும், பாபநாசம் தொகுதிக்கு தலா 361 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 391 வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை இயந்திரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. திருவையாறு தொகுதிக்கு தலா 376 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 408 வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை இயந்திரங்களும், தஞ்சாவூா் தொகுதிக்கு தலா 350 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 379 வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை இயந்திரங்களும், ஒரத்தநாடு தொகுதிக்கு தலா 344 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 373 வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை இயந்திரங்களும், பட்டுக்கோட்டை தொகுதிக்கு தலா 326 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 353 வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை இயந்திரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. பேராவூரணி தொகுதிக்கு தலா 312 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 338 வாக்காளா் சரிபாா்க்கும் காகிதத் தணிக்கை இயந்திரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com