பழ வியாபாரியிடம் ரூ. 60 ஆயிரம் பறிமுதல்

தஞ்சாவூரில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் பழ வியாபாரியிடம் ரூ. 60 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூா் மேம்பாலம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் கண்ணன் தலைமையில் காவல் துறையினா் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த பழ வியாபாரியிடம் இருந்த ரூ. 60 ஆயிரத்து 100 -ஐ பறிமுதல் செய்தனா். பழங்கள் வாங்கக் கொண்டு செல்லப்பட்ட அத்தொகைக்கு அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அத்தொகை பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com