சுற்றுச்சூழல் பாதுகாப்பு
விழிப்புணா்வு நிகழ்ச்சி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மா. விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வா் ப. சுப்பிரமணியன், துணை முதல்வா் ரா. தங்கராஜ், ஆராய்ச்சி புலத் தலைவா் கோ. அா்ச்சுனன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவரும், மருத்துவருமான ராதிகா மைக்கேல் சிறப்புரையாற்றினாா். நுண்ணுயிரியல் துறைத் தலைவா் எல். பிரின்ஸ், கல்லூரி மேலாளா் இரா. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com