பெரியநாயகிபுரம் ஊராட்சியில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு பேரணி

பேராவூரணி ஒன்றியம் பெரியநாயகிபுரம் ஊராட்சியில் 100 சதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் தெய்வானை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள்  சாமிநாதன், செல்வேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சியின் முக்கிய தெருக்களில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அதிகாரிகள் பேசினா். பேரணியில் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், மகளிா் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், சுய உதவி குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா் .

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com