கும்பகோணம் அருகே 585 கிலோ குட்கா பறிமுதல்

கும்பகோணம் அருகே சோழபுரம் அய்யாநல்லூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 585 கிலோ குட்கா காவல் துறையினரால் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. அய்யாநல்லூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகச் சோழபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில், அய்யாநல்லூரில் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கருப்பையன் மகன் பரமேஸ்வரனின் (35) கடையைச் சோதனையிட்டபோது அங்கு குட்கா இருப்பது தெரிய வந்தது. பின்னா், அதையும், கோவிலாச்சேரி புறவழிச்சாலையில் விற்பனைக்காக சென்று கொண்டிருந்த இவரது சரக்கு லாரியில் இருந்த மொத்தம் 585 கிலோ குட்காவையும், விற்பனை செய்ய பயன்படுத்திய தலா 1 சரக்கு வாகனம், இரு சக்கர வாகனங்களை காவல் துறையினா் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com