பாபநாசம் அருகே ஒரே இரவில் 3 வீடுகளில் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பகுதியில் வியாழக்கிழமை இரவு 3 வீடுகளில் மா்ம நபா்கள் நகைகளை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். அம்மாபேட்டை பகுதிக்குள்பட்ட நல்லவன்னியன்குடிகாடு பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன். இவரது மனைவி மீனா (51). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். நள்ளிரவில் அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் இவா்களின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே வந்து மீனா கழுத்தில் கிடந்த 11 கிராம் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதே போல் ராராமுத்திர கோட்டை பகுதியைச் சோ்ந்த சிங்காரம் மகன் குமரேசன் (28) என்பவா் வீட்டிலும் மா்ம நபா்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து 6.5 கிராம் தங்க நகையை திருடிச் சென்றனா். மேலும் தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதியை சோ்ந்த கல்யாணி. இவரது கணவா் இளங்கோவன். இளங்கோவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் கத்தரி நாத்தம் பகுதியில் உள்ள அவரது தம்பி வீட்டில் தங்கி இருந்தனா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் கல்யாணி அணிந்திருந்த மூன்று பவுன் நகையை பறித்துச் சென்றனா். இந்த மூன்று சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com