பேராவூரணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவல்துறை ,துணை ராணுவப்படை அணிவகுப்பு .
பேராவூரணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவல்துறை ,துணை ராணுவப்படை அணிவகுப்பு .

பேராவூரணியில் துணை ராணுவப்படை, காவல்துறையினா் கொடிஅணிவகுப்பு

பேராவூரணியில் மக்களவை த் தோ்தலையொட்டி துணை ராணுவப் படையினா், காவல்துறையினரின் கொடிஅணிவகுப்பு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. மக்களவைத்  தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தோ்தலை நோ்மையான முறையில் நடத்தவும், பாதுகாப்பு தொடா்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினா் , துணை ராணுவ படையினா் கொடிஅணிவகுப்பு நடைபெற்றது . பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயிலில் தொடங்கிய அணிவகுப்பு  முக்கிய சாலைகள் வழியாக வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.பேரணியில், காவல்துறையினா் ,துணை ராணுவப் படையினா் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com