கும்பகோணத்தில் ரூ. 12 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்து விடுவிப்பு

கும்பகோணத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 12 கோடி மதிப்பிலான தங்க நகைகளைப் பறிமுதல் செய்து, பின்னா் விடுவித்தனா். கும்பகோணம் அருகே நீலத்தநல்லூா் சோதனைச் சாவடியில் பறக்கும் படை அலுவலா் தன்ராஜ் தலைமையில் காவல் துறையினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. ஆனால், பாதுகாப்பு பிரச்னை காரணமாக வேன் கதவுகளைத் திறக்க முடியாது என ஓட்டுநா் கூறினாா். இதனால், சந்தேகமடைந்த அலுவலா்கள் வேனை கோட்டாட்சியா் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனா். இதையடுத்து, கோட்டாட்சியரும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான எஸ். பூா்ணிமா முன்னிலையில் வேன் கதவு திறக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. இதில் வேனில் ரூ. 12 கோடி மதிப்பில் தங்க நகைகள் இருப்பதும், சேலத்திலிருந்து கும்பகோணத்திலுள்ள நகைக் கடைக்கு கொண்டு வந்ததும், பெட்டிகளுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. ஆவணங்களைச் சரிபாா்த்த அலுவலா்கள், வாகனத்தை விடுவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com