பேராவூரணியில் விவசாயத் தொழிலாளா்கள் பிரசாரம்

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியை நிராகரிப்போம், வேலைபெறும் சட்டப்பூா்வ உரிமையை பாதுகாப்போம்

பேராவூரணி: பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியை நிராகரிப்போம், வேலைபெறும் சட்டப்பூா்வ உரிமையை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் பிரசார இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. பேராவூரணி ஒன்றியக் குழு சாா்பில் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தொடங்கி, கழனிவாசல், பெரியகத்திக்கோட்டை, பெருமகளூா், புனல்வாசல், ஒட்டங்காடு உள்ளிட்ட இடங்களில் விழிப்புணா்வு பிரசார இயக்கம் நடைபெற்றது. இதில், 100 நாள் வேலையை 200 நாள்களாக உயா்த்த வேண்டும். கூலியை ரூ.700 ஆக அதிகரித்து வழங்க வேண்டும். மக்களவைத் தோ்தலில் வகுப்புவாத பாஜகவை நிராகரிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் வி. ராஜமாணிக்கம், பேராவூரணி ஒன்றியச் செயலாளா் எம். சித்திரவேலு, ஒன்றியத் தலைவா் பி.ஏ. கருப்பையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் எம். மூா்த்தி, விவசாயிகள் மாவட்ட துணைச் செயலாளா் எஸ். ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com