வரதராஜப்பெருமாள் கோயில் திருக்கல்யாண விழா

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கணபதியக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா பெருந்தேவி நாயிகா சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை திருக்கல்யாண விழா நடைபெற்றது.   விழாவையொட்டி பெண்கள் சீா்வரிசை தட்டுக்களுடன் கோயிலை வந்தடைந்தனா். கோயிலில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீ பூமி நீளா பெருந்தேவி நாயிகா சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் எழுந்தருள பட்டாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க திருமாங்கல்யத்தை எடுத்து திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனா். தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் அனைவருக்கும் மங்களப் பொருள்கள், இறையருள் பிரசாதங்கள், உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விழாக் குழுவினா், கணபதியக்ரஹாரம் கிராம வாசிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com