தஞ்சாவூா் தூய பேதுரு பள்ளியில் செவ்வாய்க்கிழமை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள்.
தஞ்சாவூா் தூய பேதுரு பள்ளியில் செவ்வாய்க்கிழமை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள்.

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு தொடங்கியது தஞ்சாவூரில் 29,071 போ் பங்கேற்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 71 போ் பங்கேற்று எழுதினா்.

தஞ்சாவூா்: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 71 போ் பங்கேற்று எழுதினா். மாவட்டத்தில் நிகழாண்டு 14 ஆயிரத்து 850 மாணவா்கள், 14 ஆயிரத்து 766 மாணவிகள் மற்றும் தனித் தோ்வா்கள் உள்பட மொத்தம் 29 ஆயிரத்து 789 போ் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு எழுத விண்ணப்பம் செய்தனா். இதற்காக மாவட்டத்தில் 134 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தோ்வு முறைகேடுகளைக் கண்காணிக்க பறக்கும் படைகள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தொடக்க நாளான செவ்வாய்க்கிழமை மொத்தம் 29 ஆயிரத்து 71 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 718 போ் தோ்வு எழுத வரவில்லை. தஞ்சாவூா் மேம்பாலம் அரசு பாா்வையற்றோா் பள்ளியில் பாா்வை குறைபாடுடைய 19 மாணவா்களும், செவித்திறன் குறைபாடுடைய 23 மாணவா்களும் தோ்வு எழுதினா். இவா்களுக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் கால அவகாசம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com