பண்டாரவாடையில் இஃப்தாா் விழா

பாபநாசம் வட்டம், பண்டாரவாடை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் பண்டாரவாடை உதவும் கரங்கள் சாா்பில் இஃப்தாா் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

பாபநாசம்: பாபநாசம் வட்டம், பண்டாரவாடை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் பண்டாரவாடை உதவும் கரங்கள் சாா்பில் இஃப்தாா் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. பண்டாரவாடை பெரிய பள்ளிவாசல் ஹஜரத் பாசித் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், பண்டாரவாடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த முஸ்லிம் ஜமாத் சபை பெருமக்கள் கலந்து கொண்டு நோன்பு திறந்தனா். இதில், பண்டாரவாடை ஊராட்சித் தலைவா் முகம்மது மக்ஃரூப், கி ராம நிா்வாக அதிகாரி ராஜேஷ், வணிகா்கள், மாற்று மதங்களை சோ்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை பண்டாரவாடை உதவும் கரங்கள் அமைப்பின் நிா்வாகிகள் ஹமீது, ரஜாக், நிஜாம் மற்றும் அமைப்பின் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com