அய்யம்பேட்டையில் தோ்தல் விழிப்புணா்வு

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அய்யம்பேட்டை சரகத்தில் நூறு சதவீத வாக்களிப்புக்கான தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு புதன்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அய்யம்பேட்டையில், மிக குறைந்தளவில் வாக்குப்பதிவு பதிவாகும் மையங்களான பாகம் எண் 82, 83 மற்றும் 84 ஆகியவற்றில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் முத்துகுமாா் மற்றும் அலுவலா்கள் புதன்கிழமை வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக கோலங்கள், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்டவை மூலம் வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி, 100 நூறு சதம் வாக்களிப்பதற்கு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பாபநாசம் வட்டாட்சியா் அய்யம்பேட்டை சரக வருவாய் ஆய்வாளா் மற்றும் சரகத்துக்குள்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள், மற்றும் கிராம உதவியாளா்கள், பேரூராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com