‘என் வாக்கு- என் உரிமை’ கோலப் போட்டி

‘என் வாக்கு- என் உரிமை’ கோலப் போட்டி

தஞ்சாவூா் மேலவீதியில் மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் நோ்மையாக நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி ‘என் வாக்கு- என் உரிமை’ என்கிற விழிப்புணா்வு கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

மேலவீதி தேரடி அருகிலிருந்து பங்காரு காமாட்சி அம்மன் கோயில் நடைபெற்ற போட்டியில் ஏறத்தாழ 300 பெண்கள் கலந்து கொண்டு நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வண்ணக் கோலங்கள் போட்டனா். நிகழ்ச்சியில் தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் இரா. மகேஸ்வரி, தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா, மாநகர நல அலுவலா் வீ.சி. சுபாஷ் காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com