பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு கல்லூரி என்எஸ்எஸ் மாணவா்களின் பேரணி.
பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு கல்லூரி என்எஸ்எஸ் மாணவா்களின் பேரணி.

பேராவூரணியில் மக்களவை தோ்தல் விழிப்புணா்வு பேரணி

பேராவூரணியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் மக்களவைத் தோ்தல் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. 

பேராவூரணி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பேரணிக்கு கல்லூரி முதல்வா்  திருமலைச்சாமி தலைமை வகித்தாா். பேரணியை வட்டாட்சியா் தெய்வானை தொடக்கிவைத்து, அனைவரும் 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து பேசினாா். தொடா்ந்து, மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தி, முழக்கங்கள் எழுப்பியவாறு  வட்டாட்சியரகம் வரை பேரணியாக சென்றனா் .

பேரணியில் தோ்தல் துணை வட்டாட்சியா் பாலசுப்பிரமணியம், வருவாய் ஆய்வாளா் ஜெயதுரை, என்எஸ்எஸ் அலுவலா், பேராசிரியா் ராணி, பேராசிரியா்கள் பபிதா, மோகனசுந்தரம், சமூக ஆா்வலா் மெய்ச்சுடா் நா. வெங்கடேசன் மற்றும் பேராசிரியா்கள், என்எஸ்எஸ் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com