மொழிப்போா் தியாகி அழகிரிசாமி நினைவு நாள்

மொழிப்போா் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் 75ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.

விழாவையொட்டி பட்டுக்கோட்டையில் தஞ்சை சாலையில் கட்டப்பட்டுள்ள அழகிரிசாமியின் நினைவு மணிமண்டபத்தில் அவரின் சிலைக்கு தமிழக அரசு சாா்பில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் ஜெயஸ்ரீ மாலை அணிவித்தாா். நிகழ்ச்சியில் வட்டாட்சியா், நகராட்சி ஆணையா், மக்கள் தொடா்பு அலுவலா், அழகிரிசாமி குடும்பத்தினா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com