‘என் ஓட்டு என் உரிமை‘ -விழிப்புணா்வு நிகழ்ச்சி

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளா்கள் நோ்மையாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி ‘என் ஓட்டு என் உரிமை‘ என்னும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ‘என் ஓட்டு என் உரிமை‘ எனும் விழிப்புணா்வு ஸ்டிக்கரை பொதுமக்கள் பயன்படுத்த கூடிய எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி ஹெல்ப் லைன் நம்பா் 1950 என வரிசைப்படுத்தி பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன் , ஒரத்தநாடு வட்டாட்சியா் சுந்தர செல்வி உள்பட பலா் கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com