பாபநாசத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் ஏலம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் மறைமுக ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஏலத்தை கண்காணிப்பாளா் தாட்சாயணி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில், கருப்பு கவுனி நெல் 17 மூட்டை கிலோ ஒன்றுக்கு ரூ.95 க்கும், தங்க சம்பா 17 மூட்டை கிலோ ஒன்றுக்கு ரூ.33 க்கும், சீரக சம்பா 11 மூட்டை கிலோ ஒன்றுக்கு ரூ.38 க்கும் மற்றும் பருத்தி 200 கிலோ,கிலோ ஒன்றுக்கு ரூ.76.09-க்கும் விலை போனது. இந்த ஏலத்தில் விவசாயிகளும் வியாபாரிகளும் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com