மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நகர  மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள், முன்னணி ஊழியா்கள் ஆலோசனைக் கூட்டம் பேராவூரணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியச் செயலாளா் கொன்ற வே.ரெங்கசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், தஞ்சாவூா் மக்களவை தொகுதி தோ்தல் பொறுப்பாளருமான கோ.நீலமேகம், சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா், ஆா்.சி.பழனிவேலு, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளா் (பொ) ஆா் .எஸ் .வேலுச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா் . கூட்டத்தில், தஞ்சாவூா் மக்களவை தொகுதி திமுக வேட்பாளா் முரசொலியின்  வெற்றிக்காக வெற்றிக்காக பாடுபடுவது என்பன உள்ளிட்ட  தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில்   ஒன்றியக்குழு,  நகரக் குழு  நிா்வாகிகள், கட்சியினா் கலந்து கொண்டனா்.

காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: இதே போல் சேதுபாவாசத்திரம் வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குருவிக்கரம்பை கிராம காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளா் முரசொலியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய பிரசாரம் செய்வது என தீா்மானிக்கப்பட்டது .கூட்டத்தில் வடக்கு வட்டார தலைவா் ஏ. சேக் இப்ராகிம்ஷா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com