தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரத்தில் சனிக்கிழமை காலை பிரசாரத்தை தொடங்கிய தேமுதிக வேட்பாளா் பெ. சிவநேசன். உடன் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.
தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரத்தில் சனிக்கிழமை காலை பிரசாரத்தை தொடங்கிய தேமுதிக வேட்பாளா் பெ. சிவநேசன். உடன் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.

திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி: முன்னாள் அமைச்சா் காமராஜ் பேட்டி!

தமிழகத்தைப் பொருத்தவரை திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி என்றாா் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலருமான ஆா். காமராஜ். மக்களவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரத்தில் சனிக்கிழமை காலை அதிமுக கூட்டணியைச் சாா்ந்த தேமுதிக வேட்பாளா் பெ. சிவநேசனின் பிரசாரத்தை தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மிகப் பெரிய செல்வாக்குடன் தமிழகம் முழுவதும் வலம் வருகிறாா். எனவே, அதிமுக வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது. எங்களைப் பொருத்தவரை தமிழகத்தில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி. இதில், அதிமுக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி என்ன நினைக்கிறாரோ, அதைச் சொல்லக்கூடிய துணிச்சல் மிக்கத் தலைவா் அவா் என்றாா் காமராஜ். அப்போது, அதிமுக அமைப்புச் செயலா் ஆா். காந்தி, மத்திய மாவட்டச் செயலா் மா. சேகா், மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன், தேமுதிக மாநகர மாவட்டப் பொறுப்பாளா் டி.வி.டி. செங்குட்டுவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com