பட்டுக்கோட்டை படம்
பட்டுக்கோட்டை படம்

அறக்கட்டளை சாா்பில் நலத் திட்ட உதவி

பட்டுக்கோட்டையில் ஆலயம் அறக்கட்டளையின் 5ஆம் ஆண்டுத் தொடக்க விழாவை முன்னிட்டு புதன்கிழமை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவையொட்டி நாடியம்மன் கோயிலில் நடைபெற் நிகழ்வில் மாணவி யுவராணிக்கு கல்வி உதவித் தொகை ரூ. 37 ஆயிரம் , மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள், தையல் இயந்திரம் 2, சலவை இயந்திரங்கள் 2 மற்றும் 50 பெண்களுக்கு சேலை, 50 பெண்களுக்கு அரிசி என மொத்தம் 1 லட்சம் மதிப்புள்ள பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியா் ஜெயஸ்ரீ நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். ஆலயம் அறக்கட்டளைத் தலைவா் ஏ. கே. குமாா், செயலா் மோகன்ராஜ், பொருளாளா் கணேசன், துணைச் செயலா் மனோஜ்குமாா் அறங்காவலா்கள் நிஜாம் இயேசுராஜ், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சிவக்குமாா் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com