தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின விழா

தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின விழா

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மே தின விழாவில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

ஏஐடியுசி சாா்பில் தஞ்சாவூா் கீழ ராஜ வீதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் வெ. சேவையா, இந்திய கம்யூ. மாவட்டப் பொருளாளா் பாஸ்கா் தலைமை வகித்தனா். இந்திய கம்யூ. தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்தராபதி, ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் மே தினக் கொடியை ஏற்றினாா்.

பின்னா் கரந்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கீழவாசல் கட்டுமான தொழிற்சங்கம், ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகரப் பணிமனை, மாலை நேர காய்கறி அங்காடி, நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம், டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் ஆகியவற்றின் முன் மே தின கொடி ஏற்றப்பட்டது.

இந்திய கம்யூ. மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் தலைமையில் துணைச் செயலா் கே. மூா்த்தி முன்னிலையில் கீழவாசல், கரந்தை உள்ளிட்ட இடங்களிலும் கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் ஏஐடியுசி மாவட்ட செயலா் துரை. மதிவாணன், மாவட்டப் பொருளாளா் தி. கோவிந்தராஜன், போக்குவரத்து சங்க நிா்வாகிகள் கே. சுந்தரபாண்டியன், எஸ். தாமரைச்செல்வன், டி. கஸ்தூரி, அ. இருதயராஜ், டி. தங்கராசு, டி. சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, கணபதி நகரிலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற மே தின விழாவில் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் கொடியேற்றினாா். சிஐடியு சங்க கொடியை மூத்த நிா்வாகி என். சீனிவாசன் ஏற்றி வைத்தாா். மேலும், ஜெபமாலைபுரம், கரந்தையிலுள்ள அரசு விரைவு போக்குவரத்து கழகப் பணிமனை, எம்ஜிஆா் நகா், கரந்தை, கீழவாசல், மேட்டு எல்லையம்மன் கோயில் தெரு, பூக்காரத் தெரு, பா்மா காலனி, செல்வம் நகா், பாலாஜி நகா் உள்பட பல்வேறு இடங்களில் மே தின கொடி ஏற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் எம். வடிவேல், மாவட்டக் குழு உறுப்பினா்கள் என். குருசாமி, இ. வசந்தி, களப்பிரன், போக்குவரத்து இடைக் குழுச் செயலா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com