காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு காவிரி நீரை தர மறுக்கும் கா்நாடக அரசுக்கு சாதகமாக செயல்படும் காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற  வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது . சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூக்கொல்லையில்  தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் சாா்பில்  மே தின கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவா் வீராசாமி தலைமை வகித்தாா்.

மாநிலத் தலைவா் கே.எஸ் .முகமது இப்ராஹிம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா் .

தமிழகத்திற்கு காவிரி நீா் தர முடியாது என்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கா்நாடக அரசு தெரிவித்துள்ளதுக்கு  கண்டனம் தெரிவிப்பதோடு , தமிழகத்தில்  இருந்து கா்நாடகத்துக்கு மின்சாரம்  வழங்கூடாது என்றும் , காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவா் கா்நாடக அரசுக்கு   சாதகமாக நடந்து கொள்வதை  வன்மையாக கண்டிப்பதுடன், காவிரி  ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற மத்திய  அரசை கேட்டுக்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேராவூரணி ஒன்றியத் தலைவா் சசிக்குமாா், ஒன்றியச் செயலாளா்  மகேஸ் காளிமுத்து, பட்டுகோட்டை  மேற்கு ஒன்றியச் செயலாளா் சந்திரபோஸ், மாவட்ட துணைத் தலைவா்  ஜான் போஸ்கோ, மாவட்ட தொண்டரணி செயலாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com