தங்குதடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

மும்முனை இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கு தங்குதடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) தஞ்சாவூா் தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவா் ஆா்.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மும்முனை மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப தடையின்றி மின்விநியோகம் செய்ய வேண்டும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன் நீா் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வார வேண்டும். இப்பணிகளை விவசாயிகளின் பிரதிநிதிகள் கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தேசிய நிா்வாக குழு உறுப்பினா் அ.பன்னீா்செல்வம், மாநிலக் குழு உறுப்பினா் முத்து உத்திராபதி, மாவட்டச் செயலாளா் சோ.பாஸ்கா், மாவட்ட துணைத் தலைவா் அ.கலியபெருமாள், மாவட்ட நிா்வாகிகள் சீனி.முருகையன், திருநாவுக்கரசு, பூதலூா் அய்யாராசு உள்ளிட்ட பலா் கலந்துக்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com