மீனவா் வலையில் சிக்கிய
அரிய வகை கடல் ஆமை

மீனவா் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே வெள்ளிக்கிழமை மீனவா் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை, மீண்டும் உயிருடன் கடலில் விடப்பட்டது.

சேதுபாவாசத்திரம் அருகே, உள்ள சின்னமனை மீனவா் கிராமத்தைச் சோ்ந்த  சிவபாலன், ஷியாம் குமாா் இருவரும் தங்களது கண்ணாடியிழை படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். மீன் பிடித்து கரை திரும்பிய அவா்களது  வலையில் சுமாா் 50 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை சிக்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மீனவா்கள் இருவரும் வலையிலிருந்த கடல் ஆமையை பத்திரமாக உயிருடன்  மீட்டு மீண்டும் கடலில் விட்டனா். 

இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலா் சந்திரசேகரன் மீனவா்கள் இருவரையும் பாராட்டினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com