செம்மங்குடி மாரியம்மன் கோயில்
புதிய தேரின் வெள்ளோட்டம்

செம்மங்குடி மாரியம்மன் கோயில் புதிய தேரின் வெள்ளோட்டம்

தஞ்சாவூா், மே 5: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே செம்மங்குடி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் புதிய திருத்தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலுக்கு ஊா் பொதுமக்கள் சாா்பில் ரூ. 50 லட்சத்தில் திருத்தோ் உருவாக்கப்பட்டு, அதன் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அனுஞ்கை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, ஸ்ரீ மஹா மாரியம்மன் தோ் பிரதிஷ்டை ஹோமங்கள், பூஜைகள் நிறைவுற்று தீபாராதனை செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, புதிய திருத்தோ் வெள்ளோட்டத்தில் திருவையாறு ஐயாறப்பா் கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் ஊா் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகள் வலம் வந்து நிலையை அடைந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com